

Chennai Siva Temples
சனீஸ்வர ஸ்தல வரலாறு விளக்கம்
அகத்தீஸ்வரர் ஆலயம், பொழிச்சலூர், சென்னை - 600074.
சென்னை அருகே பல்லாவரம் ரயில் நிலையம் அருகே 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புகழ் சோழ நல்லூர் என்ற பெயர் மருவி பொழிச்சலூர் கிராமத்தில் தொண்டை வள நாட்டு நவ கிரக ஸ்தலங்களில் சனி பகவானுக்கு சிறப்பு சுற்றுலா தலமாக விளங்கும் இவ்வாலயத்தில் இருக்கும் லிங்கம் பல லட்சம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சுயம்பு லிங்கம் ஆகும்.
இவ்வாலயத்தில் அகத்திய முனிவர் இமயம் விட்டு பொதிகை மலை நாடி தவம் புரிய வந்த பொது இங்கு தங்கி இந்த சுயம்பு லிங்கத்திற்கு பூஜை செய்து இவருக்கு இறைவன் காட்சி அளித்து அருள் தந்ததால் இறைவன் அகத்தீஸ்வரர் ஆகவும் இறைவி ஆனந்தவல்லி ஆகவும் காட்சி அளிக்கின்றனர் . சனி பகவான் பாவத்தை போக்கி கொள்ள இங்கு நள்ளார் தீர்த்தம் உண்டு பண்ணி சிவ பெருமானை வழிபாட்டு தான் பிறர்க்கு செய்த பாவத்தை போக்கி கொண்டதால் இவ்வாலயத்தில் சனி பகவான் திருநள்ளாருக்கு அடுத்ததாக தனியே எழுந்தருளியுள்ளார் . இதனால் இவ்வாலயம் தொண்டை வள நாட்டு நவ கிரக ஸ்தலங்களில் சனி பகவானுக்கு சிறப்பு பரிகார ஸ்தலமாக பொழிசை வட திருநள்ளார் என அழைக்கபடுகிறது.
மேலும் இதில் ஒரு சிறப்பு உள்ளது. இது ராகு கேது பரிகார ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது . ஒரு புண்ணிய ஸ்தலத்திற்கு உண்டான, ஸ்தலம், மூர்த்தி, தீர்த்தம் என்று மூன்று சிறப்பு அம்சங்கள் கொண்டதாகும்.
பல லட்சம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சுயம்பு லிங்கமாக காட்சி அளிக்கும் இந்த ஆலயம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர் களத்தில் கஜ பிருஷ்ட விமான அமைப்புடன் உள்ள ஸ்தலங்களில் இதுவும் ஒன்று ஆகும். இந்த ஆலயத்தில் ஈசன் கிழக்கு புறம் பார்த்து இருப்பதும், அம்மன் தெற்கு புறம் பார்த்து இருப்பதும் வடக்கு புற ராஜ கோபுர வாசல் அமைப்பு கொண்டு கட்ட பெற்றதாகும். பரம்பரையாக வேளாளர் மரபில் இருந்து தனியார் நிர்வாகத்தின் மூலம் நிர்வகிக்கும் ஆலயம் ஆகும்.
இவ்வாலயத்தில் மாணிக்கவாசகர் உற்சவம், ஆருத்திரா, மஹா சிவராத்திரி, சனி பெயர்ச்சி, கார்த்திகை தீபம், சங்காபிசேகம், வள்ளி, தெய்வானை சுப்பிரமணிய திருகல்யாணம், ராகு கால பூஜை, பிரதோஷம் மிக சிறப்பான விசேச தினங்கள் ஆகும்.
எனவே பரிகார ஸ்தலமான இவ்வாலயத்தில் தாங்கள், தெரிந்தும் தெரியாமலும் செய்த உங்கள் பாவங்களை போக்கி கொள்ளவும், ராகு கேதுவால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கவும், இவ்வாலயத்தில் வந்து முறைப்படி கேட்டு தெரிந்து கொண்டு தங்களுக்கு ஏற்பட்ட எல்லா தோஷங்களுக்கும், பாவங்கள் நீங்கிடவும், வளமுடன் வாழ இங்கு பரிகாரம் செய்து தோஷ நிவர்த்தி செய்து கொள்ளலாம். நாடி ஜோதிடத்துக்கு பரிகார சிறப்பு ஸ்தலமாகவும், தொண்டை நாட்டு நவக்ரக சுற்றுலா ஸ்தலமாகவும் இவ்வாலயம் சிறப்புற்று விளங்கி வருகின்றது.
நன்கொடை வழங்குபவர்கள் தொடர்பு கொள்க
Sivasri. Kumarasamy shanmugavel B.Sc.,
Ph : 044-32564022, 09382305974.
![]() |
![]() |
![]() |
![]() |
|---|